யாழ். மாவட்டச் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திற்குப் புதிய நிர்வாகம்!
Thursday, July 28th, 2016
யாழ். மாவட்டச் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பொதுச் சபைக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(27) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது சமாசத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.
இதன் போது சமாசத் தலைவராக இணுவிலைச் சேர்ந்த செ. இலகுநாதனும், உப தலைவராக தெல்லிப்பழையைச் சேர்ந்த எஸ். குமாரலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் நிர்வாக சபை உறுப்பினர்களாக மேலும் பத்துப் பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
Related posts:
இரண்டாம் கட்ட கொரோனா பரவும் அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ள தொற்று நோய் தடுப்பு பிரிவின் வ...
தொடரும் சீரற்ற காலநிலை - வடக்கில் சீரற்ற காலநிலையால் 96 குடும்பங்கள் பாதிப்பு!
கடன் தொடர்பில் ஆலோசனை குழு நியமிக்க 3 வார அவகாசம் தேவை - வரியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை – நிதி அமை...
|
|
|


