சுவாசம் நோய் உள்ள வாக்காளர் இறுதி சில மணி நேரத்திலேயே வாக்களிக்க வேண்டும் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Friday, June 12th, 2020

சுவாசம் தொடர்பான நோய் உள்ளவர்கள் மற்றும் காய்ச்சல் உள்ள வாக்காளர் இறுதி சில மணி நேரத்திலேயே வாக்களிக்க வேண்டும் என சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட கொரோனா வழிக்காட்டல்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வாக்களார்களின் வாக்களிப்பு நடவடிக்கைக்கு தொடர்புடைய அதிகாரிகள் அனைவரும் உடனடியாக தங்கள் கையுறைகளை நீக்கிவிட்டு சவர்க்காரமிட்டு கை கழுவுவது கட்டாயமாகும்.

வாக்குகளை குறியிடும் பெட்டிகள் மற்றும் வாக்களிக்கும் நிலையத்தை ஒரு மணித்திலாயத்திற்கு ஒருமுறை கிறுமி நாசினி தெளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் நிலையத்தில் இருந்து வெளியேறிய பின்னர் சவர்க்காரமிட்டு கைகளை கழுவ வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 835ஆக உயர்வு – 240 பேர் பூரண நலமடைந்தனர் – சுகாதார அமைச்...
நீதிமன்ற உத்தரவுக்கேற்ப சமையல் எரிவாயுவை விநியோகிக்குமாறு பணிப்புரை - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க ...
அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அஸ்வெசும வாரம் - நிதியமைச்சு நடவட...