அமைச்சுப் பதவி பெறுவோரின் கல்வித் தகைமையை வெளிப்படுத்த வேண்டும் – பப்ரல் அமைப்பு கோரிக்கை!

Wednesday, December 19th, 2018

புதிய அமைச்சரவை 30 உறுப்பினர்களுக்கு மட்டுப்பட வேண்டும் என்பதுடன் அவர்களின் அமைச்சுப் பொறுப்புக்களுடன் கல்வித் தகைமைகளையும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள பப்ரல் அமைப்பு, அமைச்சரவைத் தெரிவில் பின்பற்ற வேண்டிய 6 விடயங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளது.

அமைச்சரவை உறுப்பினர்களின் கல்வித் தகைமையை கவனத்தில் கொள்ளுதல் மற்றும் அதனடிப்படையில் அமைச்சுப் பதவிகளை வழங்குதல், அவற்றைக் குறித்த அமைச்சரின் கல்வித் தகைமைகளுடன் நாட்டிற்கு அறிவித்தல் போன்ற விடயங்களைக் கட்டாயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களிடையே காணப்படும் வெறுப்பு தன்மையை இல்லாதொழித்து புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் பப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106