ஈழத்துச் சித்தர் யோகர் சுவாமிகளின் 52 ஆவது குருபூசை தின நிகழ்வு நல்லூரில் இடம்பெற்றது

Tuesday, March 22nd, 2016

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் ஈழத்துச் சித்தர் யோகர் சுவாமிகளின் 52 ஆவது குருபூசை தின நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில் சிவபூமி அறக் கட்டளையின் தலைவருர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளர் கு.பாலசண்முகன் கலந்து கொண்டு யோகர் சுவாமிகளின் வாழ்வும் பணிகளும் தொடர்பில்  சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழகத்தில்  தமிழ்த் துறையைச் சிறப்புப் பாடமாகப் பயிலும்  துர்க்காபுரம் மகளிர் இல்ல மாணவி பூ. செல்வதியம்மாவின் உரையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துர்க்காபுரம் மகளிர் இல்ல மாணவிகள் யோகர் சுவாமிகளால் அருளப் பெற்ற நற்சிந்தனைப் பாடல்களைப் பண்ணுடன் ஓதினர்.

தொடர்ந்து யோகர் சுவாமிகளின் திருவுருவப் படத்திற்கு விசேட பூசை வழிபாடுகளும்,  தீபாராதனையும் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக் கழக சமஸ்கிருதத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ம. பாலகைலாசநாத சர்மா, துர்க்காதேவி தேவஸ்தான நிர்வாக உறுப்பினர்கள், துர்க்காபுரம் மகளிர் இல்ல மாணவிகள், கல்வியலாளர்கள், அன்பர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

cac6dfd0-d240-4112-b139-ed729bd7da75



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106