203 ஓட்டங்களுக்குள் சுருண்டது அவுஸ்திரேலியா!

Wednesday, July 27th, 2016

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 203 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகின்றது.  இதன்படி இரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, நேற்று கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகின்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி சார்பாக, துடுப்பாட்ட வீரர்கள் எவரும் பிரகாசிக்காத நிலையில், நடு வரிசை வீரரான தனஞ்சய டி சில்வா அதிகபட்சமாக 24 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.  34.2 ஓவர்களுக்கு மாத்திரமே தாக்குப் பிடித்த இலங்கை, 117 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் ஹேஸில்வுட் (josh Hazlewood), மற்றும் நாதன் லயன் (Nathan Lyon) தலா மூன்று விக்கெட்டுக்களையும், மிச்சல் ஸ்ராக் (Mitchell Starc) மற்றும் ஸ்டீவ் ஒ´கீஃபெ (Steve O´Keefe) ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.

இதன்படி அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை விளையாட ஆரம்பித்தது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று 203 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அந்த அணி அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது. தற்போது இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாட ஆரம்பித்துள்ளது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106