கனமழை – அசாம் பிராந்தியத்தில் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு!
Wednesday, June 3rd, 2020
கனமழை காரணமாக இந்தியா – அசாம் பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், 4 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அசாம் மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. அசாம் தெற்கு பகுதிகளின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாரக் பள்ளத்தாக்கில் உள்ள ஹெய்ல்கண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதேபோல் கரீம்கஞ்ச் மற்றும் காச்சர் மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது.
மூன்று இடங்களிலும் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் 4 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
மீண்டும் விளாடிமீர் புட்டின் ரஸ்ய ஜனாதிபதியாக பதவியேற்பு!
நடுக்கடலில் தத்தளித்த 200 அகதிகள் ஸ்பெயினில் மீட்பு!
பாலஸ்தீனத்திற்கு அமைதிப்படையை அனுப்ப தயார் - மலேசியா பிரதமர் அறிவிப்பு!
|
|
|


