அடுத்த வாரம்முதல் பாடசாலை செயற்பாடுகளை ஆராய செல்கின்றது கண்காணிப்புக் குழு – கல்வி அமைச்சு தெரிவிப்பு!
Wednesday, June 3rd, 2020
அடுத்த வாரம்முதல் கல்வி அமைச்சின் குழுக்கள் பாடசாலைகளுக்கு சென்று கண்காணிப்பை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் நிர்வாகங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பிலேயே இந்தக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கை கழுவும் வசதிகள் உள்ளிட்ட சுகாதார ஒழுங்குவிதிகள் தொடர்பில் அந்தக்குழுவினர் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பாடசாலைகளுக்கென்று பயன்படுத்துவதற்காக 10 ஆயிரம் உடல் வெப்பமானிகளை கொள்வனவு செய்ய கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளது. இதன்படி 200 மாணவர்களுக்கு ஒரு உடல் வெப்பமானியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போராடும் உலக நாடுகள் – கொரோனா தொடர்பில் இலங்கையர்களுக்கு சற்று மன நிம்மதி !
அடுத்த வருடம்முதல் அனைத்து நிறுவனங்களும் இலாபமீட்டும் நிறுவனங்களாக உருவாக்கப்பட வேண்டும் – துறைசார் ...
சீனாவை விஞ்சும் இந்தியாவின் மக்கள் தொகை - ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் சுட்டிக்காட்டு!
|
|
|


