வடக்கு – கிழக்கில் தங்கியிருந்த இந்தியர்கள் கொழும்பில் இருந்து இந்தியாவிற்கு கப்பல்மூலம் அனுப்பிவைப்பு!
Monday, June 1st, 2020
வடக்கு கிழக்கில் தங்கியிருந்த இந்தியர்கள் அனைவரும் கொழும்பில் இருந்து இந்தியாவிற்கு இன்று கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு தருவிக்கப்பட்ட கப்பலில் 650 பேர் பயணிக்கும் வசதி கொண்ட நிலையில் இன்று காலை கொழும்பில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்மிற்கு பயணித்தனர்.
இவ்வாறு பயணிக்கும் கப்பலில் இந்தியாவில் இருந்து பல்வேறு தேவைகளிற்காகவும் இலங்கை வந்த நிலையில் கொரோனா காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டதனால் நாடு திரும்ப முடியாத 650 பேர் பயணித்துள்ளனர்..
தூத்துக்குடி துறைமுகத்திற்கு பயணிப்பதனால் அதிகமானோர் தமிழர்களே பயணிக்கும் நிலையில் வடக்கில் தங்கியிருந்த 224 இந்தியர்களும் கிழக்கு மாகாணத்தில் தங்கியிருந்த 195 பேரும் உள்ளடங்கலாகவே இன்று பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அரசு வழங்கிய வாக்குறுதிகள் எவை? தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் வெளிப்படையாக கூறவேண்டும் - ...
மண்டைத்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம்!
வட்டி இல்லா மாணவர் கடன் திட்டம் - 11 ஆம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரல்!
|
|
|


