யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதி பற்றாக்குறை – பணிப்பாளர் சத்தியமூர்த்தி !

Saturday, May 30th, 2020

யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் கடந்த சில வாரங்களாக தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதனால் குருதி கொடையாளர்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில வாரங்களாக இரத்த வங்கிக்கு தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை.

இது தவிரவும் வழமையாக நடைபெறுகின்ற இரத்ததான முகாம்கள் தற்போதைய சூழ்நிலை காரணமாக நடைபெறவில்லை.

ஆகவே குருதிக் கொடையாளர்கள் வைத்தியசாலை இரத்த வங்கியை தொடர்பு கொண்டு குருதிக்கொடை செய்யும்படி கேட்டுக் கொள்கின்றேன். எல்லா வகையான குருதிகளும் ஏற்றுக்கொள்ளப்படும். 0212223063, 0772105375 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு குருதிகளை வழங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106