அரிசிக்கான அதி கூடிய சில்லறை விலை நிர்ணயம் – நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த மாற்றம்!
Thursday, May 28th, 2020
அரிசி வகைகளுக்கான அதி கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், நாடு ஒரு கிலோ 96 ரூபாவாகவும், சம்பா 98 ரூபாவாகவும், கீரி சம்பா ஒரு கிலோவுக்கு 125 ரூபாவாகவும் அதி கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் குறித்த விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கா.பொ.த சாதாரண தர செயன்முறை பரீட்சைகள் ஆரம்பம்!
பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகை கொடுப்பனவு முறைமையின் கீழ் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து ...
"டிட்வா" புயலின் வெளி வளையம் வடக்கை தொட்டுள்ளது - மக்களுக்கு விடுக்கப்பட்டது கடும் எச்சரி...
|
|
|


