26 ஆம் திகதிய கூட்டத்தின் பின்னரே பாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, May 23rd, 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பதுதொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதென கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் ஆபத்து முற்றாக நீங்கிய பின்னரே பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதனால், பெற்றோர் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அமைச்சர் அழகபெரும குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

பொலிஸ் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும் பிரஜா பொலிஸ் எண்ணக்கருவை மேம்படுத்தும் நடவ...
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான இந்திய - இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கம் அங்குரார்ப்பணம்!
கனடாவில் குடியேற்றத்துடன் அதிகரிக்கும் சனத்தொகை - புதிதாக செல்வோர் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள...