கொரோனா தொற்று: அபுதாபி நகரில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது – வெளிவிவகார அமைச்சு!

Thursday, May 21st, 2020

அபுதாபி நகரில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காரியாலயத்தில் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதன்  காரணமாக இவ்வாறு குறித்த காரியாலயம் மூடப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இரண்டு தினங்களுக்கு இவ்வாறு மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் பின்வரும் இணையத்தளம் மூலம் slemb.abudhabi@mfa.gov.lk அல்லது இலவச அழைப்பு இலக்கமான   800 119 119 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு சேவையினை பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:

கைப்பணித்துறை மேம்பாட்டின் வளர்ச்சிக்காக என்றும் நாம் கரம்கொடுப்போம்- டக்ளஸ் தேவானந்தா!
வடக்கிலுள்ள தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களில் உழைப்பு சுரண்டல் நடைபெறுகின்றது – நாடாளுமன்றில் ட...
‘கடல்சார் பொருளாதாரம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தே...