தனியார்துறை தொடர்பில் தொழில் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வறிக்கை நாளையதினம் துறைசார் அமைச்சரிடம் கையளிப்பு!
Sunday, May 17th, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தனியார்துறை நிறுவனங்கள் தொடர்பில் தொழில் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வறிக்கை நாளையதினம், சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளதாக குறித்த விடயம் தொடர்பில் தொழில் ஆணையாளர் விமலவீர தெரிவித்தள்ளார்.
நாட்டின் தனியார்துறை வர்த்தக நிறுவனங்களின் நிலமைகள், ஊழியர்களின் பாதுகாப்பு என்பன தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளுதல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த நிறுவனங்களுக்கு அவசியமான நிவாரணங்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் ஆராய்வதற்கான பணிகளை அரசாங்கத்திற்கு இலகுபடுத்தும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படும் – ஜனாதிபதி!
ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் ஒரு எல்லை உள்ளது - ஜனநாயகத்தை மீறினால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் ...
சாந்தை விநாயகர் கலையரங்கில் நடைபெற்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சத்திரனின் பிறந்தநாள் நிகழ்வு!
|
|
|


