சமூக இடைவெளியை பேணுவதில் சிரமம்: ஒரு நாள் சேவை தற்காலிகமாக நிறுத்தம் – ஆள்ப்பதிவுத் திணைக்களம் அறிவிப்பு!
Wednesday, May 13th, 2020
தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை தொடர்ந்தும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆள்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் திணைக்களத்தின் பணிகளை ஆரம்பித்துள்ள போதிலும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடுவதால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அந்த திணைக்களம் கூறியுள்ளது.
தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. எனினும் பரீட்சைகள், நேர்முகப் பரீட்சைகள், சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளுதல், கடவுச்சீட்டு விண்ணப்பம் ஆகிய தேவைகள் காரணமாக பிரதேச செயலாளர் அலுவலகங்கள் ஊடாக தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
Related posts:
முன்னாள் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆறுமுகம் நடராஜனுக்கு டெல்லியில் அதியுயர் பதவி!
வவுனியாவில் வான் பாயும் 479 குளங்கள் - இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நி...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து - கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும...
|
|
|


