நீர்நிலைகளுக்கு சிறுவர்கள் குளிக்க செல்ல வேண்டாம் – கிளி.மாவட்ட சுகாதாரத் திணைக்களம்!

Wednesday, November 14th, 2018

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக குளங்களுக்கோ அல்லது நீர்நிலைகளுக்கோ சிறுவர்கள் குளிப்பதற்குச் செல்ல வேண்டாமென கிளிநொச்சி மாவட்ட சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மீள்குடியேற்றத்தின் பின்னர் அபிவிருத்திப் பணிகளுக்கென உருவாக்கப்பட்ட குழிகளில் தற்போது மழைவெள்ளம் தேங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் அதன் ஆழம் தெரியாமல் சிறுவர்கள் பலர் வெள்ள நீர் நிரம்பிய குழுpகளுக்குள் இறங்கி விளையாடியதில் உயிரிழந்துள்ளனர்.

எனவே நிரம்பியுள்ள குளங்களுக்கோ அல்லது நீர் நிலைகளுக்கோ சிறுவர்கள் நாடிச் செல்ல வேண்டாமெனவும் இது தொடர்பாக சிறுவர்களை பெரியோர்கள் வழி நடத்துமாறும் மாவட்ட சுகாதாரத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் பாடசாலைகளுக்குச் செல்லும் சிறுவர்கள் பாடசாலை முடிந்தவுடன் குளங்களையும் நீர்நிலைகளையும் நாடிச்செல்லாது வீடுகளுக்குத் திரும்புமாறும் மாவட்ட சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106