கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஜூலை 24 வரை மருத்துவ அவசரநிலை தொடரும் – பிரான் அரசு அறிவிப்பு!
Monday, May 4th, 2020
கொரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸில் ஜூலை 24 ஆம் திகதி வரை மருத்துவ அவசரநிலை நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெயிளிட்டுள்ளன.
கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்சில் 1 இலட்சத்து 68 ஆயிரத்து 693 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24,895 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் தாக்கம் தீவிரமடைந்த நாள்முதல் அங்கு மருத்துவ அவசர நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் நாடு முழுவதும் அமுலில் உள்ள மருத்துவ அவசரநிலை ஜூலை மாதம் 24-ம் திகதி வரை நீடித்து பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மனைவியை கொலை செய்த இலங்கையரக்கு குவைத்தில் மரணத்தண்டனை!
போராட்டங்களின் எதிரொலி: ஈராக் பிரதமர் இராஜினாமா..!
பாகிஸ்தானிலிருந்து யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஈரானில் விபத்து - 28 பயணிகள் உயிரிழப்பு!
|
|
|


