உள்ளூர் உற்பத்திகளின் நலன்கருதி உள்நாட்டு பால் மாவிற்கான விலை அதிகரிப்பு – இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவிப்பு!
Friday, May 1st, 2020
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மா வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது..
இதனடிப்படையில் ஹைலண்ட், நெஸ்ட்லே மற்றும் பெலவத்த போன்ற பால் மா வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 945 ரூபாவாகவும், 400 கிராமின் விலை 380 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு பால் மா உற்பத்தி நிறுவனங்கள் நட்டத்தில் பால் மா உற்பத்தியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இந்த விலை அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது தேர்தல் பிரச்சாரங்கள் !
பண்ணை பாலத்தில் தவறி கடலில் வீழ்ந்தவர் சடலமாக மீட்பு!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மாதாந்த விலைகளை சுயாதீனமாக தீர்மானிக்க முடியும் - முன்னாள் அமைச்சர் ...
|
|
|


