முப்படையினரை மீண்டும் அழைத்துவரும் விசேட நடவடிக்கை – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா!

Monday, April 27th, 2020

விடுமுறையில் உள்ள முப்படையினரை அவர்களது பணியிடங்களுக்கு மீண்டும் அழைத்துவரும் விசேட நடவடிக்கை இன்று(27) முன்னெடுக்கப்படுகின்றது இதற்காக நாடு முழுவதும் இன்றையதினம் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முப்படையினரின் அனைத்து விடுமுறைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.

விடுமுறையில் உள்ள முப்படையினருக்கு போக்குவரத்து வசதிகள் இல்லாவிடின் அருகில் உள்ள முகாம்களை அணுகுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதேவேளை, அவர்களை அழைத்துவருவதற்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே முப்படையில் உள்ள அனைத்து அணிகளினதும் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போது விடுமுறையில் உள்ள அதிகாரிகள் மற்றும் பிற அணிகள் உடனடியாக அந்தந்த முகாம்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுப்பில் உள்ள அதிகாரி மற்றும் பிற அதிகாரிகள் உடனடியாக முகாமின் தலைவர் அல்லது பொறுப்பான அதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மேலதிக ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106