கொவிட் – 19 A வகையான வைரேஸ் தொற்றே இலங்கையை தாக்கியுள்ளது – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு குழுவி அதிர்ச்சி தகவல்!

Monday, April 27th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு உட்பட்டவர்களுக்கு கொவிட்-19 A வகையான வைரேஸ் தொற்றியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு குழுவினால் கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவுக்கு டெங்கு ஆய்வு நிலையத்தின் இயக்குனர் பேராசிரியர் நிலிக்கா மலவிகே இதுதொடர்பில் தெரிவித்ததாவது –

கொவிட் 19 எனப்படும் புதிய கொரோனா வைரஸை விஞ்ஞான பெயரில் சாஸ் கொவிட் என்றே அழைக்கப்படுகின்றது. இதில் A, B மற்றும் C ஆகிய மூன்று அடிப்படை வகைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்ட சீனாவின் வுஹான் மாநிலத்தில் கொவிட் 19 B வகையே பரவியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஐரோப்பிய எல்லையில் அதிகமாக பரவும் கொரோனா C வகையை கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் தற்போது பரவும் கொரோனா A வகையை சேர்ந்ததென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த A வகை கொரோனா அதிகமாக அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலேயே பரவியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வைரஸின் ஒவ்வொரு பிரிவினாலும் ஏற்படும் சிக்கல்கள் வேறுபட்டவை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

சில நாடுகளில் கோவிட் -19 இறப்பு விகிதம் பாரிய அதிகரிப்பிற்கு இந்த மாற்றங்கள் காரணமாகும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய வைரஸ் தொற்றுக்கு மற்றொரு நாட்டில் காணப்படும் தடுப்பூசி இன்னும் ஒரு நாட்டிற்கு பொருத்தமானதா என்பதைப் புரிந்து கொள்ள, அந்த நாட்டில் பரவும் வைரஸ்களின் வகைகளை முதலில் அடையாளம் காண வேண்டியது அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106