இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!
Wednesday, April 15th, 2020
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதன்படி இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 195.78 ரூபாவாக பதிவாகியுள்ளது.
முன்பதாக கொரோனா தொற்று காரணமாக நாட்டின் அனைத்து வருமான வழிகளும் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பெரும் வீழ்ச்சி கண்டு 200 ரூபாவுக்கும் அதிகமாக பதிவாகியிருந்தது
இன்நிலையில் தற்போது அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 195.78 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிழப்பிடத்தக்கது.
Related posts:
வடக்குப் பாடசாலைகளில் ஆசிரியர் சமநிலைப்படுத்தல்!
'எரோப்லொட்' விமானத்துக்கான தடையை நீக்குமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை ஆராய திகதியிடப்பட்டது!
கணக்காய்வு சேவையில் 40% வெற்றிடங்கள் - கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவிப்பு!
|
|
|


