நாட்டு அரிசிக்கு நிர்ணய விலை வகுத்தார் யாழ்.மாவட்ட செயலர்!
Monday, April 13th, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆட்டக்காரி மற்றும் மொட்டைக்கறுப்பன் ஆகிய நெல் வகைகளிலிருந்து பெறப்படும் நாட்டு அரிசி ஒரு கிலோவின் அதிகூடிய சில்லறை விலையாக 120 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த இரண்டு நெல்வகைகளிலும் இருந்து பெறப்படும் தீட்டுப்பச்சை அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகூடிய சில்லறை விலையாக 115 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலருக்கும் யாழ்ப்பாணம் வணிகர் கழகம், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் இணைந்து கலந்துரையாடிய பின்னர் இந்தக் கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையை அடுத்து யாழ்ப்பாணத்தில் இந்த இரண்டு அரிசி வகைகளின் விலை ஒரு கிலோ கிராம் 140 தொடக்கம் 145 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106