அம்புலன்ஸ் மறுப்பு : இளைஞன் பரிதாப பலி – அராலியில் சம்பவம்!

Tuesday, April 7th, 2020

பொது சுகாதார பரிசோதகரின் பொறுப்பற்ற செயலால் அநியாயமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அராலியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அராலி மத்தி, ஊரத்தியைச் சேர்ந்த 30 வயதுடைய நாகேந்திரம் புஸ்பராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். கடும் காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இளைஞரை உரிய நேரத்திற்கு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கேற்ற வசதியை பொது சுகாதார பரிசோதகர் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்று அப்பிரதேச இளைஞர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதேநேரம், கொறோனா அனர்த்த ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள நிலையில், பொது சுகாதார பரிசோதகரின் அனுமதியின்றி வரமுடியாது என்று அம்புலன்ஸ் சாரதியும் மறுத்துவிட்டார் என அவர்கள் கூறுகின்றனர். குறித்த இளைஞரை உரிய நேரத்திற்கு வைத்தியசாலையில் சேர்க்காமையினாலேயே இந்த மரணம் சம்பவித்தது என்று வடபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106