ஊரடங்கு நடைமுறையை தொடர்வதற்கு ஆலோசனை!
Saturday, April 4th, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை, இம்மாதம் முடிவடையும் வரையிலும் தொடர்ச்சியாக அமுல்படுத்த அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு தரப்பினரும் விடுத்திருக்கும் கோரிக்கைக்கு அமைவாகவே, அரசாங்கம் இதுதொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் அறியமுடிகின்றது.
நாடாளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டம், ஏப்ரல் 6ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இந்நிலையில், அரசாங்கம் ஆலோசித்து வருவதைப்போல, ஊரடங்கு சட்டம் இம்மாதம் நிறைவடையும் வரையிலும் அமுல்படுத்தப்படுமாயின், இன்னும் 26 நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையில் இஸ்லாமிய குழுக்கள் மீது தடை- தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.!
பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின் துண்டிப்பு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
தனியார் மின்னுற்பத்தி நிலையத்தின் 23 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு - இலங்கை மி...
|
|
|


