தனியார் மின்னுற்பத்தி நிலையத்தின் 23 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!
Wednesday, August 23rd, 2023
மின்சார நெருக்கடியை தீர்க்கும் வகையில் மாத்தறை ஏஸ் பவர் (Ace Power) தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் 23 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக எம்பிலிபிட்டிய ஏஸ் பவர் (Ace Power) தனியார் நிறுவனத்திடமிருந்தும் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய மீன்பிடிப் படகுகள் விடுவிக்கப்படவில்லை - மீன்பிடித்துறை அமைச்சர்!
2022 இல் ஆரம்பித்த 175 திட்டங்கள் இதுவரை பூர்த்தி - எஞ்சியுள்ள திட்டங்களை 2023 க்குள் நிறைவு செய்யும...
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்காணல்களை நடத்த க...
|
|
|


