கொரோனா வைரஸின் உச்சம் – யாழ்ப்பாணத்தில் 10 குடும்பங்களும் 3 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன!
Tuesday, March 31st, 2020
சீனாவில் தொடங்கி இன்று உலகளாவிய ரீதியில் அனைவரையும் கொன்று குவிக்கும் கொரோனா வைரஸால் இலங்கையிலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்றையதினம் நீர்கொழும்பில் வசிக்கும் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் மூன்று வீடுகளைச் சேர்ந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
யாழ்ப்பாணம் நாவாந்துறை ஐந்து சந்திப் பகுதியில் ஹாதி அபூபக்கர் வீதியில் உள்ள மூன்று வீடுகளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த நபர் அண்மையில் திருமண நிகழ்வு ஒன்றுக்காக யாழ்ப்பாணம் வந்து போனதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
கடந்த 7ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்பதற்குச் சென்றுள்ளார். அங்கு இரு நாள்கள் தங்கியிருந்த பின்னர் நீர்கொழும்பு திரும்பியுள்ளார்
Related posts:
தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்த 2 வயது பாலகி மரணம் - அராலிப் பகுதியில் சோகம்!
காலநிலை மாற்றம் – பாடசாலை மாணவர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை அணியின் நிலைமை திருப்திகரமாக உள்ளது - பலமான இலங்கை அணியை உருவாக்குவதே எமது நோக்கம் - விளையா...
|
|
|


