வடக்கு மக்களுக்கு ஜனாதிபதி செயலகத்தின் முக்கிய அறிவிப்பு!
Sunday, March 22nd, 2020
வடக்கின் 05 மாவட்டங்களிலும் வாழும் மக்கள் தாங்கள் வாழும் மாவட்டங்களுக்கு வெளியே பயணம் செய்ய தடைசெய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுடைய மதகுருவை சந்தித்த மற்றும் அவருடன் தொடர்புகொண்ட அனைவரையும் அடையாளம்காணும் வரை இந்த பயணத் தடை நடைமுறையில் இருக்கும் என்றும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிய செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மார்ச் 24, செவ்வாய் காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டங்களில் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த தினங்களில் வடக்கிற்கு பயணம்செய்த சுவிட்சர்லாந்தில் இருந்து வருகைதந்த கோரோனா வைரஸ் தொற்றுடைய மதகுருவை சந்தித்த மற்றும் அவருடன் தொடர்புகொண்ட அனைவரையும் அடையாளம்காணும் வரை இந்த பயணத் தடை நடைமுறையில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
குறித்த ஐந்து மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் கொரோனா தாக்கத்திற்கு உற்படுவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106