வடக்கில் காவற்றுறை ஊரடங்குச் சட்டம் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிப்பு!
Sunday, March 22nd, 2020
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துச் செல்வதை கருத்தில் கொண்டு அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முகமாக வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) காலை 6 மணிவரை காவற்துறை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த 20 ஆம் திகதிமுதல் 23 ஆம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்துவரும் நிலையில் அது நாளை காலை தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வடக்கின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் எதிர்வரும் செவ்வாயக்கிழமை (24) காலை 6 மணிவரை காவற்துறை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கரைதுறைப்பற்றில் அதிக வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும் - பிரதேச செயலர்!
உலக வங்கியின் உயர் பிரதிநிதி இலங்கை விஜயம்!
சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சராக பதவிப் ...
|
|
|


