வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதே இலக்கு- இந்திரஜித்!
Sunday, July 24th, 2016
நாட்டிற்கான வெளிநாட்டு முதலீடுகளை எதிர்வரும் காலங்களில் 5 மடங்காக அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் சிறந்த வெளிநாட்டுக் கொள்கையை பயன்படுத்தி சர்வதேசத்துடன் புதிய வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொண்டு முதலீட்டு சந்தர்ப்பங்களை அதிகரித்து ஏற்றுமதியை அதிகரித்து இலங்கையை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் அபிவிருத்தி சவால்கள் என்ற தலைப்பில் நேற்று பிற்பகல் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஒரு விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Related posts:
எரிபொருள் விலையில் மாற்றமில்லை – நிதி அமைச்சு!
மேலதிக பாதுகாப்பு வேண்டும் - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
பெருங்குடல் புற்றுநோய் அதிகரிப்பு - விடுக்கப்பட்டது எச்சரிக்கை!
|
|
|


