காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார அமைச்சு!
Saturday, March 14th, 2020
கொரோனா அச்சம் காரணமாக காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் இதில் பலர் சில மணித்தியாலங்களில் சிகிச்சையளிக்கப்பட்டு வீடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் 30 பேர் வரை தற்போது வரை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. வீட்டிலேயே தனிமையில் இருக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிகுறிகள் தீவிரமானால் மாத்திரம் மருத்துவ சிகிச்சைகளை நாடுமாறு சுகாதார அமைச்சு கேட்டுள்ளது.
Related posts:
அபாய கட்டத்தில் நாடு: மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அவசர கடிதம்!
2022 நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த க.பொ.தர சாதாரண பரீட்சை 2023 பெப்ரவரியில் நடத்த தீர்மானம் ...
ஆசிரியைகளின் மாற்று ஆடை கோரிக்கைக்கு மகா சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு -...
|
|
|


