மைத்துனரைத் தாக்கிய பெண்ணுக்கு விளக்கமறியல்!
Saturday, July 23rd, 2016
மைத்துனரைத் தாக்கினார் என்ற குற்றச் சாட்டில் கைதான பெண்ணை எதிர்வரும் -4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(21-07-2016) உத்தரவிட்டுள்ளது.
நீண்ட வருட காலமாக வெளிநாட்டில் வசித்து வந்த குறித்த பெண்மணி கடந்த-19 ஆம் திகதி தனது சொந்தவிடமான யாழ்ப்பாணம் புங்கன் குளம் பகுதிக்கு வருகை தந்துள்ளார்.
வீட்டுக்குச் சென்றவரைக் குறித்த பெண்ணின் கணவனின் தம்பி வீட்டுக்குள் செல்லவிடாது தடுத்துள்ளார். இதனால் , ஆத்திரமடைந்த குறித்த பெண்மணி ஆணொருவருடன் சேர்ந்து தனது மைத்துனரைத் தாக்கியுள்ளார்.
குறித்த தாக்குதலால் காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்துக் குறித்த பெண்ணைக் கைது செய்த பொலிஸார் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106