கொரோனாவின் பாதிப்பு: 27,000 பேரை கட்டாய விடுமுறையில் அனுப்பிய நிறுவனம்!

Thursday, February 6th, 2020

சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகர் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் அங்குள்ள அனைத்து மாகாணங்களிலும் பரவியது. மேலும் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங், மக்காவு உள்ளிட்ட பிரதேசங்களிலும் கொரோனா வைரஸ் பரவி விட்டது.

இந்த உயிர்க்கொல்லி நோயால் நாளுக்கு நாள் உயிர்பலி அதிகரித்து வரும் அதே வேளையில் சீனாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்டவை பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. அதிலும் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் இருந்து புறப்படும் மற்றும் சீனாவுக்கு செல்லும் விமானங்களை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்து விட்டதால் விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன.

அந்த வகையில் தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட இழப்பில் இருந்து அண்மையில் மீண்டு வந்த ஹாங்காங்கின் கேத்தே பசிபிக் விமான நிறுவனம் கொரோனா வைரசால் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக தமது நிறுவனத்தில் பணியாற்றும் 27 ஆயிரம் ஊழியர்களையும் ஊதியம் இல்லா விடுப்பு எடுத்துக்கொள்ள அதன் நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106