உலக டென்னிஸ்: ஜோகோவிச் முதலிடம்!
Wednesday, February 5th, 2020
உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.
இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில், அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 8 வது முறையாக கைப்பற்றிய செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (9,720 புள்ளிகள்) 2 வது இடத்தில் இருந்து முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
32 வயதான ஜோகோவிச் 5 வது முறையாக நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அவர் நம்பர் ஒன் இடத்தை 276 வது வாரமாக அலங்கரிக்கிறார். இதன் மூலம் நம்பர் ஒன் இடத்தை அதிக வாரங்கள் வகித்த வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் 3 வது இடத்தை பிடித்துள்ளார். இந்த வகையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (310 வாரங்கள்) முதலிடத்திலும், அமெரிக்க முன்னாள் வீரர் பீட் சாம்பிராஸ் (286 வாரங்கள்) 2 வது இடத்திலும் உள்ளனர்.
அவுஸ்திரேலிய ஓபன் போட்டியில் கால்இறுதியில் டொமினிக் திம்மிடம் தோல்வி கண்ட ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (9,395 புள்ளிகள்) முதலிடத்தில் இருந்து 2 வது இடத்துக்கு சரிந்துள்ளார்.
அரைஇறுதியில் தோல்வி கண்ட சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (7,130 புள்ளிகள்) 3 வது இடத்தில் நீடிக்கிறார். இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த ஒஸ்திரியா வீரர் டொமினிக் திம் (7,045 புள்ளிகள்) ஒரு இடம் ஏற்றம் கண்டு 4 வது இடத்தை பிடித்துள்ளார். 4 வது சுற்றில் தோல்வி கண்ட ரஷ்ய வீரர் டேனில் மெட்விடேவ் (5,960 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 5 வது இடத்தை பெற்றுள்ளார்.
கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் (4,745 புள்ளிகள்) 6 வது இடத்திலும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (3,885 புள்ளிகள்) 7 வது இடத்திலும், இத்தாலி வீரர் மாட்டோ பெர்ரெட்டினி (2,905 புள்ளிகள்) 8 வது இடத்திலும் தொடருகின்றனர். பிரான்ஸ் வீரர் மான்பில்ஸ் (2,700 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 9 வது இடத்தையும், பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் (2,555 புள்ளிகள்) ஒரு இடம் ஏற்றம் கண்டு 10 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106