3 வது இடத்திற்கு முன்னேறிய இங்கிலாந்து!
Thursday, January 30th, 2020
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 9 முன்னணி அணிகள் 27 தொடர்களில் 71 போட்டிகளில் விளையாடுகின்றன.
இந்த 27 தொடர்களின் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 3-1 என கைப்பற்றிய இங்கிலாந்து 3 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து 2 தொடர்களில் 9 போட்டிகளில் விளையாடி 5 இல் வெற்றி பெற்றுள்ளது. 3 இல் தோல்வி அடைந்துள்ளது. ஒரு ஆட்டம் சமநிலையில் முடிந்துள்ளது. இதன்மூலம் 146 புள்ளிகள் பெற்று 3 வது இடத்தில் உள்ளது.
இந்தியா 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியா 296 புள்ளிகள் பெற்று 2 வது இடத்தில் உள்ளது.
Related posts:
‘சுயநலத்துக்காக விளையாடும் வீரர்கள் அணிக்கு தேவையில்லை’ பாகிஸ்தான் புதிய பயிற்சியாளர் மிக்கி ஆர்த...
ஐ.பி.எல்: இறுதி போட்டிக்கு முதலாவது அணியாக மும்பை இந்தியன்ஸ் தகுதி!
முஸ்பிகுர் போராட்டம் வீண் : அவுஸ்திரேலியா வெற்றி!
|
|
|


