கொரோனா வைரஸ் உருவானது எப்படி? விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல்!
Thursday, January 23rd, 2020
சீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிய வைரஸானகொரோனா எப்படிஉருவாகியது என்பது குறித்து, விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலொன்றை வெளியிட்டுள்ளனர்.
சீனாவில்இருந்து உலகம் முழுவதும் பரவும் கொடிய கொரோனா வைரஸ், வுவானில் திறந்தவெளி சந்தையில் விற்கப்படும் பாம்புகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
வுவான்நகரில் உள்ள கடல் உணவுசந்தை கொரோனா வைரஸ் உருவாக காரணமாக இருந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போதுஇந்த சந்தை உள்ளூர் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு ஒட்டுண்ணி விலங்குகளை பாதிக்கும் விகாரங்களின் மரபணுக்களை அவர்கள் ஆராய்ந்தபோது, கொரோனா வைரசால் பாம்புகள் எளிதில் பாதிக்கப்படுவதை பீக்கிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பாம்புகள் பின்னர் மனிதர்களுக்கு தொற்றுநோயைத் பரப்பும் வைரஸ் புள்ளியாக செயந்பட்டன.
மத்தியவுவானில் உள்ள ஹூவானன் கடல்உணவு சந்தையில் கோலாக்கள், எலிகள் மற்றும் ஓநாய் குட்டிகள் விற்கப்படுகிறது.
இதற்கிடையில்வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க வுவான் நகரில் உள்ள யாரும் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் எனவும்,சீனாவின் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள்வுவான் நகருக்கு வர வேண்டாம் எனவும்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மனிதர்களின்நுரையீரலை தாக்கி, மூச்சுத்திணறல் போன்ற நோய்களை உருவாக்கி, மரணத்தை ஏற்படுத்தக் கூடியது கொரோனா வைரஸ். இது ஒருவரிடம் இருந்துமற்றவருக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டது.
சீனாவின்வுவான் நகரில் உருவாகி உள்ள இந்த வைரஸ்,தற்போது சீனா மட்டுமின்றி அமெரிக்கா,தென்கொரியா, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது.
கொரோனாவைரஸ்தாக்குதலுக்கு சீனாவில் இதுவரை சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 550 க்கும் அதிகமானோர் கொரோனாவைரஸ்பாதிப்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106