பாலம் இடிந்து விழுந்து வீபத்து: சுமத்ரா தீவில் 09 பேர் பலி!

Wednesday, January 22nd, 2020

இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் கவுர் நகரில் ஆற்றின் நடுவே புதிதாக பாலம் கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த பாலத்தின் மீது மாணவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ள நிலையில், இடிந்து விழுந்த பாலத்தோடு சேர்ந்து, அதில் நின்றவர்களும் ஆற்றுக்குள் விழுந்துள்ளனர்.

ஏற்கனவே பெய்து வரும் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்தது. இதனால் அதில் விழுந்தவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் பலர் மீட்கப்பட்ட நிலையில், 9 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தோனேசிய தலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றமையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இந்த மாதத்தில் மட்டும் அங்கு 67 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106