பேக்கரி பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பொது மக்களுக்கு வட் வரி சலுகையை பெற்றுக் கொடுப்பதில்லை!
Saturday, January 18th, 2020
பேக்கரி பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பொது மக்களுக்கு வெட் வரி சலுகையை பெற்றுக்கொடுப்பது இல்லை என உள்நாட்டு வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெட் வரி சலுகை பொது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படுவதில்லை என கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக உள்நாட்டு வருமான வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் நாதுன் கமகே தெரிவித்துள்ளார்.
ஆகவே பொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்கள் மீது வெட் வரி சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உள்நாட்டு வருமான வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் நாதுன் கமகே மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு வாய்ப்பே இல்லை - கடற்படையின் ஊடகப் பேச்சாளர்!
நாடு திரும்பியவர்களுக்கு விமான நிலைய சுங்க தீர்வை அற்ற கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம்...
இஸ்ரேல் - ஈரான் மோதல்களை நியாயப்படுத்தும், ஜி7 நாடுகளின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல - முன...
|
|
|


