மலேரியா நுளம்புகளை தடுக்கும் கோழிகள்புதிய கண்டுபிடிப்பு!
Friday, July 22nd, 2016
மலேரியாவை சுமந்துவரும் நுளம்புகளை சில விலங்குகளின் வாசனையால் அதிலும் குறிப்பாக கோழிகளின் வாசனையால் தடுக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அனோபிலிஸ் அராபியென்சிஸ் கொசு, விலங்குகளின் ரத்தத்தை காட்டிலும், மனித ரத்தத்தையே பெரிதும் விரும்பவதாக எத்தியோப்பியாவில் பணி செய்துவரும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும், இது கால்நடைகளான ஆடு மற்றும் வெள்ளாடுகளிலிருந்து ரத்தத்தை அவ்வப்போது உறிஞ்சுகிறது. ஆனால், கோழிகளை மட்டும் தவிர்த்துவிடுகிறது.
இந்த கண்டுபிடிப்பானது மலேரியா நோய் மிக அதிகமாக தொற்றிப் பரவியுள்ள பகுதிகளிலும், பூச்சிக் கொல்லிகளுக்கு எதிராக கொசுக்களின் எதிர்ப்பு திறன் வளர்ந்து வரும் பகுதிகளிலும், பயனுள்ளதாக இருக்கும் என்று இந்த ஸ்வீடிஷ் – எத்தியோப்பிய குழு தெரிவித்துள்ளது.
Related posts:
உயிரினங்கள் வாழ தகுதியுள்ள 20 கிரகங்கள் கண்டுபிடிப்பு!
மைக்கேல் பெல்ப்ஸ்சை வீழ்த்தி தங்கம் வென்ற சிங்கப்பூர் வீரர்!
51வது ஹாட்ரிக் கோல்: மெஸ்சி அபாரம்!
|
|
|


