மீண்டும் சானியா மிர்சா சர்வதேச போட்டிகளில்… !
Wednesday, January 1st, 2020
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக 26 கிலோ கிராம் எடையை குறைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆறு 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சானியா மிர்சா குடும்ப வாழ்க்கை உள்ளிட்ட சில காரணங்களால் சுமார் 2 வருடங்கள் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் மீண்டும் களமிறங்க தீர்மானித்து கடந்த சில மாதங்களாக தீவிர பயிற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
33 வயதான சானியா மிர்சா எதிர்வரும் 11 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் உக்ரைனின் நாடியா கிச்செனோக்குடன் இணைந்து களமிறங்க உள்ளார்.
Related posts:
பாக்.–மே.தீ.வுகள் தொடர் இலங்கையில் !
யாழ். மாவட்டச் செயலகம் சதுரங்கத்தில் சம்பியனானது!
IPL தொடர் - சூதாட்டத்தில் சிக்கிய பரபலங்கள்!
|
|
|


