முதற் பறப்பில் விபத்துக்குள்ளான கடல் – 5 பேர் பலி!
Friday, July 22nd, 2016
சீனாவின் சங்காய் நகரில் கடல் விமானமொன்றின் அங்குரார்ப்பணபறப்பு வைபவத்தின் போது விபத்தக்கள்ளாகியுள்ளது.
முக்கிய விருந்தினர்கள் சகிதம் பறந்த அந்த விமானம்நெடுஞ்சாலைப் பாலத்தில் மீது விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேர்உயிரிழந்துள்ளனர்.
30 மில்லியன் யுவான் பெறுமதியுடைய அந்த விமானத்தில் சம்பவம் இடம்பெற்ற போது இரு விமான ஊழியர்கள் 8 விருந்தினர்கள் உட்பட 10 பேர் பயணித்துள்ளனர்.
மேற்படி விமானத்தில் பயணித்த விருந்தினர்களில் அநேகர் அரசாங்க அதிகாரிகளும்ஊடகவியலாளர்களுமாவர்.விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்த அந்த விமானம்இராட்சத பாரந்தூக்கி உபகரணம் மூலம் கடலிலிருந்து தூக்கப்பட்டது.


Related posts:
மகள்கள் விரும்பினால் இராணுவத்தில் சேரலாம் - ஒபாமா!
இலக்கியத்துக்கான நோபல் பரிசு தேதி அறிவிப்பு!
இலங்கையருக்கு பாதிப்பில்லை!
|
|
|


