அதிகாரத்தை யாரிடம் கொடுக்கவேண்டும் என்பதை சிந்தித்து முடிவெடுங்கள் – பாதிக்கப்பட்டதொண்டர் ஆசிரியர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

Sunday, December 22nd, 2019


வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சேவை நியமனங்களில் உள்ளீர்க்கப்படாத தொண்டர் ஆசிரியர்கள் தமது நியமனதை உறுதி செய்து தருமாறு கோரி கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்திது கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்றது.

இதன்போது தகுதிகள் இருந்தும் நியமனத்தில் ஊள்ளிர்க்கப்படாது தாம் நீண்டகாலமாக இந்த சேவையை செய்து வந்தபோதும் தாங்கள் நியமனத்தில் தொடர்ந்துர்ம் உள்ளீர்க்கப்படாது புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளோம். இனதால் தற்போது சுமார் 200 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளோம். இதில் பலர் அரச தொழில் வாய்ப்பில் உள்ளீர்க்கப்படும் வயதெல்லையையும் அண்மித்து வருகின்றனர்.

அத்துடன் இந்த தொழில் நிலையை நம்பியே இவர்களது எதிர்காலமும் குடும்பமும் தங்கியுள்ளது. இவர்களது இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு நியமனத்தை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் –

இன்று நான் அமைச்சராக இருந்தபோதும் உங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பெற்றுத்தருவதற்கான அதிகாரத்தை மக்கள் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் எனக்கு தந்திருக்கவில்லை.

நான் கோரியதுபோல ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் என்னை நம்பி வாக்குப்பலத்தை ஜனாதிபதி கோட்டப யராஜபக்ச அவர்களுக்கு தந்திருந்தால் உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் உடனடியாக தீர்வு கண்டிருக்க முடியும்.

வரவுள்ள தேர்தலில் அதிகாரத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என்றும் நீங்கள் உங்கள் எதிர்காலம் தொடர்பாகவும் சிந்தித்து எமது கரங்களுக்கு அதிகாரங்களை தருவீர்களானால் நாம் நிச்சயம் உங்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருவேன் என்றார்.

Related posts:

வீட்டுத் திட்டங்களில் பயனாளிகளுக்கு இலகுவான நடைமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா
பலநாள் கலன்கள் மூலம் ஆழ்கடல் தொழிலில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு பயிற்சிகளுடன் வங்கிக் கடன்கடனும்...
பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண வன்முறையற்ற ஜனநாயக வழியில் மக்கள் அணிதிரண்டால் தீர்வினை பெற்றுத்தர எப்ப...

கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் சிறுமி றெஜினாவின் இழப்பே இறுதி படுகொலையாக இருக்கும் - மாணவர் போராட்ட...
வடக்கில் மேற்கொள்ளப்படும் நீர்வேளாண்மை தொடர்பிலான கடல்சார் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் காணொளி...
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு – கடற்றொழில் மேம்பாடுகளுக்கு உபகரண உ...