பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண வன்முறையற்ற ஜனநாயக வழியில் மக்கள் அணிதிரண்டால் தீர்வினை பெற்றுத்தர எப்போதும் தயாரகவே இருக்கின்றேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, July 20th, 2024

பிரச்சினைகளுக்கு வன்முறையற்ற ஜனநாயக முறைப்படி தீர்வினை காண மக்கள் அணிதிரளும் பட்சத்தில் தீர்வினை பெற்றுத்தர எப்போதும் தயாரகவே இருக்கின்றேன் என   அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஈவினை கிராமத்தின் வளர்ச்சி அந்த மக்களின் வழ்வாதார மேன்பாட்டிற்காக அவர்களின் குரலாக தன்னுடைய பங்களிப்பு எப்போதும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இளம் விவசாய தொழில் முனைவோர் கிராமமாக ஈவினை கிராம் தெரிவாகியுள்ள நிலையில் அதன் அங்குரார்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இக் கருத்தினை தெரிவித்துள்ளார்

மேலும் நிகழ்வில் விவசாய முயற்சியாளர்களுக்கான விவசாய உபகரணங்களும் வளங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்பதாக இளம் விவசாய முயற்சியாண்மை கிராமமாக யாழ் மாவட்டத்தில் ஈவினைக் கிராமம் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலில் இளைஞர்களை தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் திட்டத்தில்   இளம் விவசாய முயற்சியாண்மை  கிராமம்’ என்ற திட்டம் நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒரு கிராமம் தெரிவுசெய்யப்பட்டு ஒரு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது

இதன் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரையில் யாழ் மாவட்டத்தில் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஈவினை கிராமம் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆலோசனைகளின்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட இந்த இளம் விவசாய முயற்சியாண்மை கிராமமான ஈவினை கிராமம்  தெரிவாகியிரந்ததன் அடிப்படையில் அதன் அங்குரார்பண நிகழ்வை இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

முன்பதாக இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமமாக ஈவினை கிராம் தெரிவாகியுள்ள நிலையில் அதன் அங்குரார்பண நிகழ்விற்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈவினை கற்பக விநாயகர் ஆலையத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளிலும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரச அதிபர், வலி தெற்கு பிரதேச செயலர், மாகாண விவசாய பணிப்பாளர், கமநல சேவைகள் பணிப்பாளர்,  மற்றும் துறைசார் அதிகாரிகள் விவசாய  மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

நிலையான பொருளாதார வியூகத்தின் பலவீனமே இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு காரணம் - டக்ளஸ் எம்.பி நா...
ஜனாதிபதி - பிரதமரின் இறுதித் தீர்மானங்கள் தமிழ் மக்களுக்கு எதிரானதாக அமையாது - அமைச்சர் டக்ளஸ் நம...
புங்குடுதீவு – கேரதீவு பகுதிக்கு வாரமொருமுறை கிராமசேவகரின் சேவைக்கு ஏற்பாடு - பேருந்து சேவையை ஆரம்ப...

தலைமுறைகளுக்கு சொத்துச் சேர்க்கும் அக்கறை தமிழ் மக்கள் மீது இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெர...
ஐயாத்துரை ஐயாவின் கனவுகள் நிறைவேறும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மாவை கலட்டி மக்களுக்கு உறுதி!
கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி நிலைய தொழிலாளர்கள் நிரந்தர நியமனத்துக்கு வகை செய்து தருமாறு அமைச்சர் டக்...