இலங்கையில் அறிமுகமாகும் சூரியசக்தி முச்சக்கர வண்டி!
Friday, December 13th, 2019
இலங்கையில் முதல் முறையாக சூரிய சக்தியில் இயங்கும் முச்சக்கர வண்டி கட்டமைப்பு ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
நிலையான எரிசக்தி ஆணையம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரிய அரசாங்கத்தின் உதவியின் கீழ் சூரிய சக்தி முச்சக்கர வண்டி கட்டமைப்பு நாளையதினம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெறவுள்ளது.
எரிபொருள் பயன்படுத்தாமல், முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தி கட்டமைப்பு மூலம் அதன் பட்டரி சார்ஜ் செய்யப்பட வைப்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.
Related posts:
கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா எதிர்வரும் சனிக்கிழமை!
மின்தடை!
இந்தியாவிலிருந்து வரும் இலங்கை அகதிகளின் பிரச்சினைகளை தீர்க்க விசேட வேலைத்திட்டம் - நீதியமைச்சின் செ...
|
|
|


