கைதிகளின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்ததுமுடிவு!
Thursday, July 21st, 2016
கடந்த 18 ஆம் திகதி முதல் யாழ்ப்பாண சிறைகளிலுள்ள கைதிகள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக இவர்கள் சிறைத்தண்டனைப் பெற்று வருவதாகவும், மிகநீண்ட நாட்களாக சிறையில் உள்ள இவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர்கள் உண்ணாவிரதத்தை முன்னெடுத்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் குறித்த கைதிகள் தமது போராட்டத்தைக்கைவிட்டு உணவு உண்ண ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
Related posts:
புலோலி பாடசாலைக்கு அருகில் மிதிவெடி!
எச்.எம்.பீ.வீ குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை - ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ண...
அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் கல்விச் சீர்திருத்தம்!
|
|
|


