நாடாளுமன்றம் செல்லும் நிதி மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கை!
Monday, December 2nd, 2019
அரசாங்க கணக்கு குழுவின் கடந்த நிதியாண்டின் நிதி மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கை நாடாளுமன்றின் அடுத்த அமர்வில் முன்வைக்கப்படவுள்ளது.
அரசாங்க கணக்குக் குழுவின் தலைவர் அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்துள்ளார்.
844 அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகள் இதில் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கணக்காய்வாளரின் ஆவணத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட 26 விசாரணைகளின் அறிக்கையும் நாளைய நாடாளுமன்ற அமர்வின் போது முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்க கணக்குக் குழுவின் தலைவர் அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மீனவர்களின் அத்துமீறல்களில் வீழ்ச்சி - மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர்!
சுகாதாரச் சீர்கேடு: யாழ்ப்பாணத்தில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது வழக்கு!
சனல் 4 காணொளி ஏன் தற்போது வெளியிடப்பட்டது - அமைச்சர் மனுஷ நாணயக்கார கேள்வி!
|
|
|


