ஜனாதிபதி இந்தியாவுக்கு பயணம்!
Thursday, November 28th, 2019
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு இன்று (28) பயணிக்கவுள்ளார்.
இந்திய பிரமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அங்கு செல்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தில் அவர் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளார்.
அத்துடன் இந்திய பிரதமருடன், ஜனாதிபதி இரு தரப்பு பேச்சுவார்தைகளிலும் ஈடுடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய அரசின் அதிகாரிகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
Related posts:
அமரர் தங்கமகேந்திரனின் மறைவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!
கன மழை - கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!
14 துறைகளுக்கு வரி அறவீடு - வெளியானது முக்கிய அறிவிப்பு - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட...
|
|
|


