இதுவரை 3821 முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு!
Thursday, November 14th, 2019
கடந்த மாதம் 8 ஆம் திகதியில் இருந்து நேற்று பிற்பகல் மாலை 4.00 வரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3821 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 27 முறைப்பாடுகளும் மற்றும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் 3687 முறைப்பாடுகளும் அவற்றுள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 92 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவை அனைத்தும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு இன்று(05)!
தற்போதைய நெருக்கடியை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்குவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன்...
வருமான வரிசட்டங்களை சாதாரண முறையில் நடைமுறைபடுத்த வேண்டும் - யாழ் மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்க...
|
|
|


