பதவியில் இருந்து வெளியேறினார் ஜனாதிபதி மைத்திரி!
Wednesday, October 9th, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி விலகியுள்ளார் .
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான கருத்து முரண்பாட்டில் ஜனாதிபதி மைத்ரி சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
தேர்தல் முடியும் வரை பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி தேர்தல் பிரச்சார பணிகளில் ஜனாதிபதி மைத்ரி ஒதுங்கியிருப்பாரெனவும் உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன.
கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்க மைத்திரி இணக்கம் தெரிவித்த போதும், தாமரை சின்னத்தில் போட்டியிட மறுப்பு தெரிவித்து வந்தார். இதன்காரணமாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மைத்திரி பதவியில் இருந்து விலகியதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
தேர்தல் வாக்காளர் இடாப்பு தொடர்பில் மேன்முறையீடு!
ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்தில் இதுவரை 41 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது - பொலிஸ் ஊடக பிரிவு அ...
எதிர்வரும் திங்கள்முதல் அனைத்து தொழிலிடங்களும் வழமைக்கு திரும்பும் - வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
|
|
|


