புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
Sunday, October 6th, 2019
இந்தாண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது. www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
இதேவேளை, மாவட்ட மற்றும் நாடளாவிய ரீதியிலான தரப்படுத்தல் வெளியிடப்பட மாட்டாது என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ள முடியும்.
கொழும்பு மற்றும் ஜயவர்தனபுர கல்வி வலயங்களை சேர்ந்த பாடசாலை அதிபர்கள் நாளை (07) முற்பகல் 9 மணிக்கு பின்னர் பரீட்சைகள் திணைக்களத்தில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும். ஏனைய பாடசாலைகளுக்கு பெறுபேறுகள் தபாலில் அனுப்பிவைக்கப்படும் என, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
அரச சொத்துக்களோ அல்லது வாகனங்களோ தேர்தல் விடயங்களுக்கப் பயன்படுத்தக்கூடாது - ஜனாதிபதி !
கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு சபாநாயகரிடம்!
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சகலரும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒத்துழைப்பை வழங்குங்கள் - இர...
|
|
|


