கோத்தபாய ராஜபக்சவே நிச்சியம் வெற்றி பெறுவார் – பிரபல ஜோதிடர் ஆரூடம்!
Tuesday, October 1st, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவே நிச்சியம் வெற்றி பெறுவார் என இலங்கையை சேர்ந்த பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த தெரிவித்துள்ளார்.
கோத்தபாய தோல்வி அடைவார் என கூறும் எவரும் தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு இந்திக்க தொட்டவத்த சவால் விடுத்துள்ளார். காணொளி மூலம் இந்த சவாலை விடுத்துள்ளார்.
“ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச உரிய முறையில் வெற்றி பெறுவார். அப்படி இல்லை என்று கூறும் யாராக இருந்தாலும், அவர்களிடம் எனது கருத்தை உறுதிப்படுத்த முடியும்.
யோக பலம், ஜோதிடம் அல்லது எந்தவொரு முறையிலும் கோத்தபாய வெற்றி பெறுவார் என்பதனை உறுதி செய்ய என்னால் முடியும்” என ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இரத்த தானம் செய்யுமாறு இரத்த வங்கி வேண்டுகோள்!
மின்சார சபை பெற்றோலியத் திணைக்களத்திற்கிடையில் இணக்கப்பாடு!
லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் இராஜினாமா கையளிப்பு!
|
|
|
நுண் கடன் திட்டத்துக்கு வேலணையில் தடை : மத்திய வங்கியின் ஆளுநருக்கு பிரதேச சபையால் பரிந்துரை - தவி...
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ரோந்துகள் அதிகரிக்கப்படும் - சிவில் பாதுகாப்புக் கூட்டத்தில் பொலிஸ் அதிகாரி த...
தொடரும் கனமழை - யாழ்மாவட்டத்தில் 1047 பேர் பாதிப்பு - மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பண...


