எலிக்காய்ச்சலால் 3317 பேர் பாதிப்பு – சுகாதார அமைச்சு!
Monday, September 23rd, 2019
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 3317 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கபட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதத்திலேயே அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சின் தொற்று நோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜனவரி, மார்ச், மற்றும் ஜூன் மாதங்களிலும் அதிகமானோர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டதுடன் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகமானோர் பதிவாகியுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 717 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தில் 430 பேரும், காலியில் 321 பேரும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காய்ச்சல், கண் சிவத்தல், தலைவலி, போன்றவை எலிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
அனுமதி கிடைக்குமானால் அடுத்த12 மணித்தியாலங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க தயார் - இராஜாங்க...
இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்- துருக்கிக்கான இலங்கை தூதுவர் ரிஸ்லி ஹசன் அறிவிப்பு!
"லஞ்சீட்" பாவனை - சுகாதாரமின்றி உணவு விற்பனை - உணவு நிலையத்துக்கு ஓர் இலட்சம் தண்டம் விதித...
|
|
|


